வாழ்வை உணர்ந்து கொள்

ஒரு குடும்பத்தார் என்னை வரவேற்று இருந்தனர். மாலையில் அங்கே சென்று இப்போது தான் வீடு திரும்பினேன். ஒரு சுவையான நிகழ்ச்சி அங்கே நடைபெற்றது.

அந்த வீட்டில் நிறைய குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து சீட்டுக்கட்டை எடுத்து ஒரு மாளிகையைத் தயாரித்தார்கள். எனக்கும் அதைக் காட்டினார்கள். அது மிகவும் அழகாக இருந்தது. நான் பாராட்டும் தெரிவித்தேன்.

குடும்பத் தலைவியானவர் கூறினார்: 'சீட்டுக் கட்டின் மாளிகைக்கும் பாராட்டா? ஒரு மெல்லிய காற்று வீசினாலும் சீட்டுகள் தரைமட்டமாகி விடுமே'
நான் சிரித்து விட்டேன். குழந்தைகள் என் சிரிப்புக்குக் காரணம் கேட்டனர். அதே விநாடி சீட்டு மாளிகை காற்றின் வீச்சால் சரிந்து விட்டது. அந்தக் குழந்தைகளின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. உடனே அந்த பெண்மணி கூறினார்: 'பார்த்தீர்களா? நான் அப்போதே சொன்னேனல்லவா? ' நான் அவரிடம் கூறினேன்: ' நான் மேலும் பல மாளிகைகளைக் கண்டிருக்கிறேன். எல்லாம் சரிபவைகளே!'

கற்களால் அமைக்கப்படும் மாளிகையும் சீட்டுக்கட்டைப் போன்ற மாளிகைகளே. குழந்தைகளின் மாளிகை மட்டுமல்ல, பெரியவர்களின் மாளிகையும் சீட்டுக்கட்டைப் போல சிதறுண்டு செல்பவையே. நாமெல்லோருமே மாளிகை கட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். கற்பனைகளில், கனவுகளின் மாளிகைகள், ஒரேயொரு மெல்லிய காற்று! எல்லாம் மண்ணோடு மண்ணாகி விடுகின்றன. இந்த அர்த்தத்தில் பார்த்தால் நாமெல்லோரும் குழந்தைகளே. ஒரு சிலரே முதிர்ச்சி அடைகின்றனர். இல்லையெனில் மற்ற எல்லோரும் குழந்தைகளாகவே மரித்து விடுகின்றனர்.

எல்லா மாளிகைகளுமே சீட்டுக்கட்டு மாளிகைகளே. இதனை அறிந்து கொண்டாலே போதும். மனிதன் முதிர்ச்சி அடைந்து விடுகிறான். இருப்பினும் அவன் மீண்டும் அதனைக்கட்டுவதில் முனையலாம். ஆனால் அவை அனைத்தும் நடிப்பாகும்.

-- ஓஷோ --

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts