சாந்தமே உருவான மதியவேளை

சாந்தமே உருவான மதியவேளை. வெண்மையற்ற வெயிலும் செடிகளும் உறக்கத்தில் இருந்தன. ஒரு நாவல்மர நிழலில் வந்து அமர்ந்துள்ளேன். அந்த மரத்திலிருந்து இலைகள் அவ்வப்போது விழுந்து கொண்டே இருந்தன. எல்லாமே பழைய இலைகள். எல்லா மரங்களிலும் புதிய இலைகள் முளைத்துக் கொண்டிருந்தன. அந்த புதிய இலைகளுடன் புதிய பறவைகளும், வண்டுகளும் வருகை தந்தவாறு இருந்தன. அவற்றின் பாடலுக்கு ஒரு முடிவே இல்லாமல் இருந்தது. எத்தனை எத்தனை விதமான மதுர கீதங்கள் அந்த மதிய வேளையில் பிரவாகித்துக் கொண்டு இருந்தன. அந்த இனிய சங்கீதத்தை நான் கேட்டவாறே அமர்ந்திருக்கிறேன். கேட்டவாறே நானும் அந்த சங்கீதத்தில் கலந்து விடுகிறேன்.

சங்கீதத்தின் உலகமே –சுயத்தின் உலகம்.

இந்தச் சங்கீதம் ஒவ்வொருவரிலும் உண்டு. இதனைப் படைக்க வேண்டியதில்லை. அதனைச் செவியுற மௌனத்தை ஏற்கவேண்டியதாகிறது. மௌனத்தை ஏற்றதும் திரை உடனே விலகிவிடுகிறது. ஆரம்பத்திலிருந்தே இருந்தது. இப்போது செவியில் படுகிறது. அப்போது தான் முதன் முறையாக நமக்கு நாம் வறுமையானவர்களல்லர் என்ற அறிவு புலப்படுகிறது. அளவில்லாத பெரும் ஐஸ்வரியம் நமக்கு கிடைத்துவிட்டதாக உணர்வு ஏற்படுகிறது. பிறகு நமக்கு சிரிப்புத்தான் வரும். காரணம் நாம் எதைக் காலம் முழுக்க தேடிக் கொண்டு இருந்தோமோ அது நமக்குள்ளேயே அமர்ந்திருந்தது.

-- ஓஷோ--

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts