கடவுள் என்பது என்ன!

இந்தக் கேள்வி பலருடைய மனங்களில் தோன்றுவதில்லை. நேற்று ஒரு வாலிபர் இதை என்னிடம் கேட்டார். கடவுள் ஏதோ பொருள் என்பதைப் போல் கேட்கப்படுகிறது. ஏதோ அவன் தேடுவர்களை விட்டு விலகி இருப்பதைப் போலவும், தேடுவதால் மற்ற பொருள்களைப் போல் அவன் கிடைக்கக்கூடியவன் என்பதைப் போலவும் கேட்கிறார்கள். கடவுளை அடைவதென்பதும், அவனை புரிந்துகொள்வதென்பதும் எல்லாமே வீணானது. ஏனெனில் அவன் நம்மைச் சுற்றியே இருக்கிறான். 'நான் அவனிலேயே உள்ளேன். உண்மையில் சொல்லப்போனால் 'நான்' இல்லவே இல்லை, இருப்பது யாவும் அவனே!

'இருப்பவன்' அவன் பெயர்தான் கடவுள். வாழ்க்கையினுள்ளே அவன் மறைந்துள்ளான். சுயமே வாழ்க்கை. அவனுடைய இருப்பென்பது பார்வையில் கிடையாது. ஆனால் இருப்பதெல்லாம் அவனில் உள்ளன. 'ஆகுவது' இருப்பது, பெயரற்றது இவை தான் அவனுடைய நாமங்கள். அவனைத் தேட முடியாது. ஏனெனில் நானும் அவனிலேயே உள்ளேன். அவனில் மூழ்கலாம். மூழ்கியதும் அவனைப் பெற்று விட முடியும்.

ஒரு கதையுண்டு.

மீன் ஒன்று கடலின் பெயரைக் கேட்டுக் கேட்டுக் களைத்துவிட்டது. மீன்களின் ராணியை ஒரு முறை அது கேட்டது: 'நான் பல காலமாக கடலின் பெயரைக் கேட்டு வருகிறேன். இந்த கடலென்பது என்ன, அது எங்கே உள்ளது?' அதற்கு ராணி பதில் தந்தது: 'கடலில்தான் உன்னுடைய பிறப்பும் வாழ்வும் உலகமும். கடலேதான் உன்னுடைய இருப்பு. கடலே உன்னில் உள்ளது. உனக்கு வெளியிலும் உள்ளது. கடலிலிருந்து நீ உதயமானாய், கடலே உனது முடிவாகும். கடலே உன்னை எந்நேரமும் சூழ்ந்துள்ளது.'
கடவுளும் ஒவ்வொருவரையும் எந்நேரமும் சூழ்ந்துள்ளார். ஆனால் நாமோ மயக்கத்தில் இருக்கிறோம். ஆகவே நமக்கு அவனுடைய தரிசனம் கிடைப்பதில்லை. மயக்கம் தான் உலகம், வாழ்க்கை. மயக்கமற்ற நிலையே கடவுள்

-- ஓஷோ --

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts