எந்த சூழ்நிலை ஏற்படினும்

எந்த சூழ்நிலை ஏற்படினும் உன் ஆனந்த நிலையை கைவிடாதே 

ஒரு ஜென் கதை

ஒரு பெண் ஜென் ஞானி தன் பயணத்தில் ஒருநாள் இரவு ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.அந்த ஊர்க்காரர்களுக்கு ஜென் கொளகைக்காரகளைக் கண்டாலே பிடிக்காது.அந்த பெண் துறவியும் ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி தங்க இடம் கேட்டார்.ஒருவரும் இடம் தராததுடன் எல்லோரும் கதவை சாத்திவிட்டனர்.

வேறு வழியில்லாததால் கிராமத்தின் வெளியே தங்க நேர்ந்தது.அவர் ஒரு பழ மரத்தடியில் தங்கிக் கொண்டார்.கடுமையான குளிர் .காட்டு விலங்குகள் வேறு கத்திக் கொண்டிருந்தன.களைப்பின் மிகுதியால் சற்றே கண்ணயர்ந்து தூங்கினார்.நள்ளிரவில் குளிர் தாங்க முடியாது விழித்துக் கொண்டார்.

வானத்தில் முழுநிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.மரத்திலிருந்து மணமுடைய மலர்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.வயலில் செடிகள் காற்றுக்கு அழகாக ஆடிக் கொண்டிருந்தன.

இந்த மனோரம்மியமான காட்சிகளைக் கண்டு மனம் மயங்கினார் அந்தத் துறவி.மறுநாள் காலை அவர் ஒவ்வொருவர் வீடாகச் சென்று அவர்கள் தனக்கு தங்க இடம் கொடுக்காததற்கு நன்றி கூறினார்.கிராமத்து மக்கள் புரியாமல் விழிக்க அவர் சொன்னார்,

''உங்களில் யாரேனும் தங்க இடம் கொடுத்திருந்தால் நேற்று இரவு இயற்கையின் அழகினை அள்ளிப் பருகியிருக்க மாட்டேன்.தங்க நிலவினை காணவும் , மலர்களின் மணத்தை அறியவும்,

மூடுபனியை ரசிக்கவும் வயல்செடிகளின் நாட்டியத்தையும் காண வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி,''எந்த சூழ்நிலையிலும் இன்பம் அடையும் மனப்பக்குவம் தான் ஜென் வழிமுறைகள்.

--ஓஷோ--

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts