பைபிளை மறந்து விடு

பைபிளை மறந்து விடு யேசுவாய் தன்மையாய் மாறிவிடு , தம்மபதத்தை மறந்து விடு புத்தரின் சாராம்சமாய் மாறிவிடு , கீதையை மறந்து விடு கிருஷ்ணரின் இருப்பாய் மாறி விடு , 
ஓஷோவின் கருத்தை படித்து விட்டு மறந்து விடு , அதன் சாராம்சமாய் மாறிவிடு 
மொத்தத்தில் 
கருத்துக்களை படித்து உணர்ந்து மறந்து விடு , கருத்தின் சாராம்சமாய் மாறிவிடு , 

அப்படி நீ மாறினால் நீயும் ஒரு புத்தா , நீயும் ஒரு இயேசு , நீயும் ஒரு ஓஷோ . 

மாற நீ தயாரா ? 

வார்த்தைகளை மறப்பது என்பது மிகவும் கடினமானது. ஆவை மனதை இறுகப் பற்றிக் கொண்டுள்ளது. ஆந்த வலையைத் தூக்கி எறிவது மிகவும் கடினம். ஏனெனில் அதற்குள் மீன்கள் மட்டும் மாட்டிக் கொண்டிருக்கவில்லை. மீன் பிடிப்பவனும் மாட்டிக் கொண்டுள்ளான். இது மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று. வார்த்தைகளுடன் வேலை செய்வது என்பது தீயுடன் விளையாடுவது போன்றது. ஏனெனில் வார்த்தைகள் அர்த்தத்தைவிட முக்கியமாகி அர்த்தத்தை இழந்து விட்டுள்ளன. அடையாளம் மிகவும் கனமாகி, பொருள் முற்றிலுமாய் தொலைந்து விட்டது. நீங்கள் மையத்தை மறந்துவிடும்படி உங்களை வெளிப்பரப்பு மயக்கி விட்டது.

இது உலகம் முழுவதும் நிகழந்து கொண்டு தான் இருக்கிறது. கிறிஸ்து என்பது உட்பொருள், கிறஸ்தவம் என்பது ஒரு வார்த்தைதான் : புத்தர் என்பது உட்பொருள், 'தாம்மபதா' என்பது ஒரு வார்த்தைதான். கிருஷ்ணர் என்பது உட்பொருள், கீதை ஒன்றுமேயில்லை. அது ஒரு பொறிதான். ஆனால் கீதை நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கிருஷ்ணர் மறக்கப்பட்டுவிட்டார். ஆல்லது நீங்கள் கிருஷ்ணரை நினைவு கூர்கிறீர்கள் என்றால், கீதையினால் தான் நீங்கள் அவரை நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறீர்கள்; என்றால், அது ஆலயங்களால்தான். புpரசங்கங்களினால்தான், பைபிளினால்தான். வார்த்தைகளினால்தான் மக்கள் வலையைச் சுமக்கிறார்கள். அது ஒரு வலைதான் என்று தெரியாமலேயே பலர் வாழ்கிறார்கள், அது ஒரு பொறிதான் என்று உணராமல்.

கருத்துக்களை படித்து உணர்ந்து மறந்து விடு , கருத்தின் சாராம்சமாய் மாறிவிடு ,

அப்படி நீ மாறினால் நீயும் ஒரு புத்தா , நீயும் ஒரு இயேசு , நீயும் ஒரு ஓஷோ .

மாற நீ தயாரா ?

-- ஓஷோ ---

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts