பதினெட்டு யோகஸித்திகளும் பலன்களும்:-

குண்டலினி யோகா குறியீடு
பஞ்ச மகாபூதங்களின் வடிவத்தை ”தன்மாத்திரை” என்பர். இதையே சூட்சும வடிவாகக் கொண்டு பிரம்மத்தில், மனதைநிலைநிறுத்தி தியானிக்கும் யோகிக்கு ‘அணிமா’ என்ற சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை அணுவைபோல் மிகமிகச் சிறிய வடிவத்தை எடுக்கலாம்.

’மஹத்’ எனும் தத்துவரூபமாக விளங்கும் இறைவனிடம் மனதை நிலைநிறுத்தி தியானிக்கும் யோகிக்கு ‘மஹிமா’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை மலைப் போல் மிக மிகப் பெரிதாக்கிக் கொள்ள முடியும்.

பகவானை ‘பரமாணுவாக’ தியானிக்கும் யோகிக்கு ‘லகிமா’ எனும் சித்தி கிட்டுகிறது. இந்த சித்தி மூலம் உடலை காற்றைப் போல் இலேசான எடையுடன் மாற்றிக் கொள்ள முடியும்.

பரப்பிரம்மத்தின் அஹங்கார தத்துவத்தில் தன் மனதை நிலைநிறுத்தும் யோகிக்கு, ’பிராப்தி’ எனும் சித்தியால் ஐம்புலன்களைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வரும் ஆற்றல் பெறுகிறார்.

பிறப்பு இறப்பு இல்லாத பகவானின் ’மஹத்’ எனும் தத்துவமே ‘சூராத்மா’. ஆகும். சூராத்மாவில் மனதை நிலைப்பெறச் செய்பவர்கள் ‘பிராகாம்யம்’ எனும் சித்தி பெற்ற யோகி பிரம்மாண்டம் முழுமைக்கும் தலைமை தாங்குகிறார்.

முக்குணமயமான மாயைக்கு அதிபதியும், படைத்தல், காத்தல், அழித்தல் சக்தியும் கொண்ட பகவானிடத்தில் மனதை இலயிக்கும் யோகிக்கு ‘ஈசித்வம்’ எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தியினால் நான்முகன் முதலான தேவர்களுக்கு ஆணையிடும் தகுதி பெறுகிறார்.

பகவான் எனும் சொல்லிற்கு பொருளாக இருக்கும், விராட், ஹிரண்யகர்பன், அந்தக்கரணம் எனும் மூன்று நிலைகளை கடந்து, நாலாவது நிலையில் உள்ள பிரம்மத்தில் மனதை செலுத்தும் யோகிக்கு ‘வசித்துவம்’ எனும் சித்தி கிட்டுகிறது. இதன் மூலம் யோகிக்கு அனைத்தையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகிறது.

நிர்குணபிரம்மத்(அருவ நிலை)த்தில் மனதை நிலை நிறுத்தும் யோகிகள் மிக உயர்ந்த பேரானந்தத்துடன் விருப்பங்களின் இறுதி எல்லையை அடைந்து “காமா வஸாயிதா” என்ற சித்தி அடைந்த யோகி, இதனையே தன் விருப்பங்களின் இறுதி எல்லை (காமா வஸாயிதா) என்ற சித்தியாக கூறுகிறார்கள்.
இதர யோகசித்திகள்[தொகு]

பதஞ்சலி முனிவர் சிலை, ஆதிசேஷனின் மறு அவதாரம்
ஆகாயத்தை இறைவனாக தியானிப்பவனுக்கு, பறவைகளின் பேசும் சக்தி கிடைக்கும்.

தன் கண்களில் சூரியனையும், சூரியனில் தன் கண்களையும் இணைத்து மனதில் இறைவனை தியானம் செய்பவனுக்கு, உலகம் முழவதையும் கண்ணால் பார்க்கும் சக்தி அடைகிறான்.

மனதை உபாதான காரணமாகக் கொண்டு, எந்தெந்த வடிவத்தை அடைய விரும்பி பகவானை தியானிக்கும் யோகிக்கு, தான் விரும்பும் வடிவத்தை அடைகிறான்.

தான் விரும்பும் காலத்தில் மரணமடைய விரும்பும் யோகி, குதிகாலை, மலத்துவாரத்தை அடைத்துக்கொண்டு, பிராணசக்தியை, இருதயம்-மார்பு-கழத்து-தலை என்ற வரிசைப்படி மேல் நோக்கி கொண்டு வந்து, பின்னர் ’பிரம்மரந்திரம்’ என்ற கபாலத்தில் உள்ள துவாரம் வழியாக உயிரை வெளியேற்றி துறக்க வேண்டும். இச்சக்திக்கு கபால மோட்சம் என்பர்.

மனம், உடல், அதில் உறையும் வாயுக்களுடன் சேர்ந்து பகவானை தியானிப்பவனுக்கு, ’மனோஜவம்’ என்ற ஆற்றல் கிடைத்து அதன் மூலம் யோகி தான் விரும்ம்பும் இடத்திற்கு அந்த விநாடியே சென்றடைகிறான்.

தான் விரும்பும் உடலில் நுழைய விரும்பும் யோகி, தான் அவ்வுடலில் இருப்பதாகச் தியானித்துக் கொண்டு, பிராணன் சூட்சும வடிவாக, வெளியிலிருக்கும், வாயுவுடன், தன் உடலை விட்டு விட்டு வேறு உடலில் நுழைகிறான். இதனை ’கூடு விட்டு கூடு பாய்தல்’ என்பர்.

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts