ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிர ுக்கின்றார்கள்.. இப்போ இளைஞர்களோட ஃபேஷனே என்ன தெரியுமா?

அது கே.எப்.சிக்கு போனாலோ, மெர்ரி பிரவுனுக்கு போனாலோ, பிசா சென்டர்களுக்கு அல்லது வேறு எந்த உணவகங்களுக்கு போனாலோ உணவுடன் ஒரு கோக் பாட்டிலை வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டு இடையிடையே குடித்துக்கொண்ட ே உணவருந்துவதுதான். இந்த கோக்கின் விஷத்தன்மையை பற்றி இவர்கள் யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. இந்த கோக் என்ற பானத்தை ஒரு பாலித்தீன் பையில் ஊற்றி தொங்கவிட்டால் அந்த பாலிதீன் பை அடுத்த நாள் ஓட்டையாகி கோக் சிந்த ஆரம்பித்துவிடும். பிளாஸ்டிக் பையை ஓட்டை போடும் வீரியம் இந்த பானத்திற்கு உண்டு. இவ்வளவு ஏன்.. ஒரு மனிதனின் பிடுங்கப்பட்ட பல் அல்லது ஒரு கோழியின் எலும்பு துண்டு இவற்றை கோக்கில் போட்டு ஊற வைத்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த இரண்டும் கரைந்துபோய் விடுகின்றது. அப்படி என்றால் அந்த பானத்திற்கு எவ்வளவு வீரியம் இருக்கும் என்பதை யாரும் உணராமல் அல்லது தெரியாமல் எப்போதும் கோக்கோ கோலாவை குடித்துக்கொண்ட ிருக்கின்றார்கள் பலர் நம் நாட்டில். உணவு உண்டபின்னர் நமது வயிற்றுப்பகுதிக்குள் சென்று அது செரி மானம் அடைவதற்கு பல்வேறு சுரப்பிகள் நமது உடலில் வேலைகளை செய்து அந்த உணவை செரிக்கச் செய்கின்றது.. இதற்கு குறைந்தபட்சம் 4 மணிமுதல் 6 மணி நேரம் தேவைப்படுகின்றது. அசைவ உணவு என்றால் இன்னும் கூடுதல் நேரம்பிடிக்கும். ஆனால் இந்த கோக்கோ கோலா பானம் உணவு உண்ணும் போது, உணவினூடே இடைஇடையே சென்று விடுவதால் செரிமானச் சுரப்பிகள் அனைத்திற்கும் வேலையில்லாமல் செய்துவிட்டு அந்தப் பணியை தானே எடுத்துக்கொண்டு உணவில் உள்ள எந்தச் சத்துக்களையும் உடலுக்கு சரிவர அனுப்பாமல் அப்படியே செரிமானம் செய்துவிடுகின்றது.. இந்த பானத்தைப் பற்றி மிகவும் கேவலமாகச் சொல்லவேண்டுமென் றால் மனிதர்கள் டாய்லட்டில் மலம் கழித்துவிட்டு பின்னர் அந்த மலம் வெளியேற flushout செய்து சுத்தப்படுத்துவது போல வயிற்றில் உள்ள உணவை அப்படியே கரைத்து உடலில் உள்ள உணவுப்பையை க்ளீன் செய்துவிடுகின்றது இந்த கோக் எனும் பானம். ஒரு கோக்கோகோலா பானத்தை டாய்லட் க்ளீனராக பயன்படுத்தினால் டாய்லட் பளிச்சென்றாகிவிடும். நாகரீகம் என்கின்ற பெயரில் தங்களது இரைப்பையை டாய்லட் க்ளீனர் கொண்டு நிரப்பிக்கொண்டி ருக்கின்றார்கள் இன்றைய இளைஞர்கள்.. குடல் புண், இரைப்பையில் ஓட்டை இப்படி பல சிக்கல்களை இந்தப்பானத்தை தொடர்ந்து பயன்படுத்துவர்க ளுக்கு ஏற்படுவது உறுதி.. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் திருந்தாதவர்கள் திருந்தப்போவதில ்லை.. ஊதுகின்ற சங்கை ஊதிவைப்போம்..

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts