இயேசு மாதிரி ஆக ஆசையா?

சந்திரமோகன்
(ஓஷோ) சிறுவனாக இருக்கும்போது ஒரு பழக்கம் இருந்தது. எல்லா கோயில்களுக்கும் போவான். இந்து கோயில்கள், மசூதி, குருத்வார்....ஒன்றைக்கூட விட மாட்டான். அவர்கள் ஊரில் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும், ஐந்து கிறிஸ்தவ குடும்பங்களும் இருந்தன. அங்கும் அடிக்கடி போய் வருவான். 

தேவாலயத்தில் இருந்த பாதிரியார் சந்திரமோகனை தொடர்ந்து கவனித்து வந்தார். பிரசங்கத்தின்போது, மற்றவர்கள் எல்லாம் கொட்டாவி விட்டபடியும், அசிரத்தையோடும் கேட்டுக்கொண்டிருக்க, அவன் மட்டும் விழிப்போடு ஒவ்வொரு வார்த்தையையும் கேட்பதை கவனித்தார்.

அவன் கிறிஸ்தவ மதத்தின் மேல் தீராத பற்றுக் கொண்டிப்பதாக அவர் எண்ணினார். ஒருநாள் அவனை அழைத்தார்.
"தம்பி! நான் உன்னை ரொம்ப நாளா கவனிச்சுக்கிட்டு வர்றேன். ரொம்ப கவனமா பிரசங்கம் எல்லாத்தையும் கேக்கறே. உனக்கு இயேசு மாதிரி ஆகணும்னு ஆசையா?" என்று கேட்டார் பாதிரியார்.
அதற்கு சந்திரமோகன்
(ஓஷோ), "இல்லை. எனக்கு இயேசு மாதிரி ஆகணும்னு எந்த விருப்பமும் இல்லை. முக்கியமா, அவரை மாதிரி என்னையும் சிலுவையில் அறையறதை நான் விரும்பலை. அவர்கிட்ட ஏதோ ஒரு தப்பு இருக்கு. இல்லன்னா, அவரை சிலுவையில் அறைஞ்சிருக்க மாட்டாங்க. நான. தினமும் கண்ணாடி முன்னாடி நின்னு, அவரோட பரிதாபமான, சோகமான முகத்தை மாதிரியே என் முகத்தையும் வச்சுக்கிட்டு நின்னு பாத்திருக்கேன். என்னால அப்படி ஒரு சோகத்தைக் கொண்டு வரவே முடியல. அப்பறம் எப்பிடி நான் இயேசுவாக முடியும்" என்றான்.

" இல்ல...நான்தான் தப்பா நினைச்சிட்டேன் போல..."என்றார் பாதிரியார்.
அதற்கு அவன்(ஓஷோ), " ஆமா. அதுதான் உண்மை. எனக்கு உங்களைவிட இயேசு மேல அதிக ஆர்வம் இருக்கு. ஏன்னா, நீங்க சம்பளம் வாங்கிட்டு போதனை செய்யறவரு. நான் அப்படி இல்ல. உங்களுக்கு சம்பளம் இல்லைன்னு வச்சுக்குவோம். நீங்க இந்தத் தொழிலை விட்டுட்டுப் போயிடுவீங்க" என்றான்.

அந்த பாதிரியார், சந்திரமோகன் சொன்னதை கேட்டு தலையைக் குனிந்து கொண்டார். உண்மையில், அவன் சொன்னது போலத்தான் நடந்தது. அங்கே இருந்த கிறிஸ்தவர்கள் எல்லோரும் ரயில்வே பணியாளர்கள்.
அவர்களுக்கு மாற்றல் கிடைத்து வேறு ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அதற்குப் பிறகு, தேவாலயத்துக்கு வருவதற்கு ஆள்கள் இல்லாமல், அதை இழுத்து மூடிவிட்டு வேறு ஊருக்கு போய்ச் சேர்ந்தார் அந்த பாதிரியார்.

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts