ஓஷோ ஒரு முறை ஒருவர் இசைப்பதை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார். அவரும் இசையில் மூழ்கி வாசித்தார். அவர் இசைத்து முடித்து ஒஷோவிடம், "நான் அதில் முழுவதுமாக மூழ்கி வாசித்தேன். ஏன் என்னால் கடவுளை அறிய முடியவில்லை" என்று கேட்டார். அதற்கு ஓஷோ," நீ அதற்கு வெகு அருகில் வந்தாய். ஆனால் மிகச்சிறிய அளவில் தவற விட்டுவிட்டாய். நீ ஏறத்தாள கடவுளை அறிய வந்து, சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டுவிட்டாய். நீ இசையில் எந்த அளவிற்கு மூழ்க முடியுமோ அந்த அளவிற்கு மூழ்கு. கூடவே விழிப்புணர்வோடு(சாட்சியாக) இரு" என்றார். நாம் என்ன செய்கிறோம் என்பதில் பிரச்சினையே இல்லை. அதை ஆழ்ந்து அனுபவித்து செய்யும்போது நம்மை அங்கே இழந்து விடுகிறோம். அந்த நிலையில் சாட்சியாக இருக்க முடிந்தால் நீ தேடாமலேயே கடவுளை நேருக்கு நேர் சந்திக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment